Nov 6, 2012

பிரார்த்தனை

பிரார்த்தனை 

வேண்டுதலுடன்
 பிரார்த்திக்கும்
வேலையெல்லாம்
 அசிரீரீயாக ஒலிக்கிறது
தமிழன்பனின் தங்க வரிகள்,
 "விதைக்க மறந்தவனே! - உனக்கேன்
அறுவடை ஞாபகம்!! "

மன்னிப்பு

மன்னிப்பு
என் முதல்
கடமை !

உன் முதல்
குணம் !!

ரச்சகரின் வழியில்
வாழ்பவள் நீ !!!


 மரணத்தைவிட
கொடுமையானது !
மன்னிக்கப்பட்டவனின்
குற்றவுணர்வு !!

என்
பாவங்களை
அறிக்கை செய்கிறேன் !

மன்னிக்கப்பட அல்ல,
என்
குற்றவுணர்வு
குறைய !!

பாவத்தின்
சம்பளம்
மரணம் !

மறந்தும் மன்னித்துவிடதே - என்னை
மரணமேனும் மன்னிக்கட்டும்!!

May 30, 2012

தாயுமானவன்

மனதுக்கு பிடித்தவனுடன்
மணிகணக்கில் வாதம்செய்து
தீர்மாணங்களை தீர்மாணித்து
அலைபேசியில் விடைபெற்று
அணிகலன் துறந்து
மாற்றுடை மடித்துவைத்து
வெளியேற எத்தனித்தபோது
எதிர்பட்டது அது !!

முன்வழுக்கையோடு எந்தை
மடியினில் மழலையாய் நான் !
பள்ளி செல்லுகையில்
பதிவான புகைப்படம் !!

தலையணையில்
முகம் புதைத்து
கண்ணீரை காணிக்கையாக்கி
முகம் துடைக்கையில்
எங்கோ கேட்டது !
புறப்பட்டு செல்லும்
புகைவண்டி சத்தம் !!

Feb 3, 2012

பட்டம்-நூல்

அவர்கள்
கேலிசெய்கிறார்கள்!
அறிந்தும்
இவன் சிரிக்கிறான் !
அவர்களை எண்ணி!!

அவர்கள்
புறக்கணிக்கிறார்கள்!
இவன் நாடுகிறான்!
நட்பையென்னி !!

அவர்கள் பட்டமாகிறார்கள்!
இவன் நூலகிறான்!

அவர்கள்
மேலே மேலே
போகிறார்கள் !

இவன்
மேலும் மேலும்
தொடர்கிறான் !

அவர்கள்
அறுத்து செல்கிறார்கள் !
இவன்
கீழ் விழுகிறான் !

அவர்கள்
மரத்தில் சிக்கி
கிழிந்து போகிறார்கள்!

இவன்
மீண்டு நூலகிறான்!
புதியதோர் பட்டத்திற்கு!!