Oct 6, 2011

நாற்றுகள்

முதல் நாள் 
பள்ளி செல்லும்
குழந்தை,

பேரம் படிந்து 
இழுத்து செல்லப்படும் 
பசுங்கன்று ,

புயல் மழையில் 
கூடு இழந்த
பறவை,

நுனி கருகிய
வேனில் கால
வேம்பு,
  
அனைத்திலும்
வேறுபட்டு சிரிக்கின்றன
செங்கழனி நாற்றுகள்!

பறிக்கப்படும் 
வலி மறந்து 
புதுவயல் காணும் 
ஆவலில்!!

நாம் நாற்றுகள்!
பறிக்கபட்டாலும் ,
பதியப்படுவோம்!!


Jul 22, 2011

கா(த்திருத்)தல்



காத்திருத்தல் 
சுகமானது!

உன் தரிசன 
தருணத்திற்காக 
காத்திருத்தல் 
சுகமானது!!

நீ அமர்ந்த
பூங்கா இருக்கையில்
நான் அமர 
காத்திருத்தல் 
சுகமானது!!

நீ தூக்கிபோடும்
காய்ந்த ரோஜாவை 
சேகரிக்க 
காத்திருத்தல் 
சுகமானது!!

காத்திருத்தல் 
ரணமானது!

காதலுடன் 
நான் காத்திருக்க
உன்னவன் பூச்சூடியபோது 
காத்திருத்தல் 
ரணமானது!!

 


 






முகமூடி

காணும் வழியெங்கும்
முகமூடிகள் 

பசுபோல் ஒன்று 
புலிபோல் ஒன்று

வேங்கை  ஒன்று
வெள்ளாடு ஒன்று

வேடிக்கை மனிதர்கள் 
கையில் 
சில முகமூடிகள்

பச்சோந்திகள் கையில் 
பல முகமூடிகள்

வீடு நுழைகையில் 
கண்ணாடி நோக்கினேன்
எனையறியாமல் 
என் முகத்திலும் 
ஓர் முகமூடி!!

 

Jun 6, 2011

உதிரி பூக்கள்

பூவே உனக்காக 

முட்களாய் 
பிறக்க விரும்புகிறேன் 
பூவே உனக்காக !!


காகித மனசு

உன் 
நிலவுப் பார்வையில் 
தீப்பற்றிக்கொண்டது 
என் 
காகித மனசு

Feb 14, 2011

தேவதை மொழி

உன்னை காணும்
வேலைமட்டும் ஊமையாகிறேன் !
ஊர்முழுக்க வெட்டிக்கதை
பேசும் நான் !!

தேவர்களின் சொர்க்கம்
உன் தேசமென்பதில்
துளியும் சந்தேகமில்லை !
தேவதை உன்னை கண்டபின் !!

உன் வாய்மொழி மட்டுமல்ல
விழிமொழியும் புலப்படுவதில்லை
என் அறிவுக்கு !!

என் மொழிமட்டுமல்ல
வலியும் நீயறிவாய்!
என்னினும்
மௌனம் ஏனோ?

பரதமுனியை
தேடுகிறேன் - உன்
அபிநயத்தை மொழிபெயர்க்க !!

எந்த தேசத்தில்
கற்றுத்தரப்படுகிறது - இந்த
தேவதையின் (விழி) மொழிகள் ?